Wednesday, September 28, 2011

எனக்கு ஏன் பிடிக்கும் ஹாலிவுட் சினிமா?

        சிறுவயது முதலே சினிமா விரும்பி பார்ப்பவன்.அதிலும் தமிழ்,மலையாளம் மற்றும் ஆங்கில மொழிப்படங்கள் என்றால் ஒரே குஷிதான்.இதற்கு அடுத்துதான் கொரியன் படங்கள் என்னை ஈர்க்கின்றன.பார்க்கும் படங்களில் இன்றுவரை என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்துபவை ஹாலிவுட் படங்கள்! தரமான நேர்த்தியான படைப்புகளுக்கு உதாரணம் இவைகள் என்றால் அவை மிகையாகாது.அதிலும் குறிப்பாக மிகையற்ற நடிப்பு,தெளிவான ஒளிப்பதிவு,காதுகளை குடையாத பின்னணிஇசை,மிகச்சரியான கதைக்களங்கள்,விதவிதமான கதாப்பாத்திரங்கள்,பிரமிக்க வைக்கும் தொழிற்நுட்பம்..., இப்படி  சொல்லிக்கொண்டே போகலாம்.

      ஹாலிவுட் நடிகர்களின் நடிப்பு மிகை இல்லாமல்,முக பாவனை ஆகட்டும்,உடல் மொழியாகட்டும்,அதனையும் வசீகரிக்கக் கூடியவை! அதிலும் குறிப்பாக வசன உச்சரிப்பை பற்றி கூறியே ஆகவேண்டும்.முக்கிய கதாபத்திரங்கள் ஆகட்டும் இல்லை துணை கதாப்பாத்திரங்கள் ஆகட்டும் ஒவ்வொருவரும் பேசும்போது நம்மை "மெஸ்மெரிசம்" செய்வது போலவே தோன்றுகிறது.


     ஒளிப்பதிவு! அத்தனையும் கண்களுக்கு விருந்து.பிரேம் பை பிரேம் தடுமாற்றம் இல்லாமல் தெளிவானவை.மோசமான ஒளிப்பதிவு என்றோ தரமற்றவை என்றோ இன்று வரை என்னால் ஒன்றை கூட கூறமுடியாது.உங்களுக்கு சவால் கூட விடுக்கமுடியும்!நான் ஹாலிவுட் படங்களை தூக்கிவைத்து கொண்டாட முழுமுதற் காரணம் ஒளிப்பதிவாகத்தான் இருக்கணும்.

    பின்னணி இசை! ஒரு படத்திற்கான தேவைகளில் முக்கியமான ஒன்று. படத்தின் பின்னணி இசையை மட்டுமே கேட்டு அது ரொமான்ஸ் படமா இல்லை அதிரடிப்படமா இல்லை த்ரில்லிங் படமா என்று யூகிக்க கூடியதாக இருக்கணும்.இதில் ஆங்கிலப்படங்கள் ஆரம்பம் முதலே லாவகமாக  இசையை இசையாக மிகவும்  கவனமாக கையாள்கின்றனர்.தமிழ்ப்படங்களில் தேவை இல்லமால் அரிவாளுக்கு கொடுக்கும் "மெட்டல் எபெக்ட்"இசை நம் காதுகளை பதம் பார்க்கும்.அதுபோன்ற இம்சை  இங்கில்லை.பின்னணி இசைக்காகவே திரும்பத்திரும்ப பார்க்கலாம் எனத்தூண்டும் படங்கள் ஏராளம்!

      கதைக்களங்கள் இவர்களைப்போல் தேர்ந்தெடுக்க நம்மவர்கள் சிறிது முன்னேறி இருக்கலாம்.அனால் அப்பட்டமாக காப்பி அடிப்பதை நம்ம "டயர்டக்கர்கள்" எப்போ நிறுத்துவார்களோ தெரியலை! "ஜுராசிக் பார்க்கிற்கு" அப்புறம் ஏதாவது ஒரு "ஜந்துவை" கட்டிஅழுவதை ஹாலிவுட்காரர்களும் நிறுத்தினால்  சந்தோஷம்.அனால் பழைய படங்கள் இன்னும் ஏராளமாக உள்ளதால் அவைகளைப் பார்த்தும் ஆறுதல்பட்டுக்கலாம்.

 
  இவ்வளவு சொல்லிட்டு தொழிற்நுட்பம் பற்றி பேசவில்லை என்றால்,எனக்கு அடுத்த படத்திற்கான டிக்கெடோ அல்லது டொராண்ட் லிங்கோ (HD-பிரிண்ட்) கிடைக்கமால் போகக்கூடும்.எனக்கு அதீத கிராஃபிக்ஸ் வகையறா பிடிக்காது,ஆனால் அளவான அதேசமயம்  நம்மால் எளிதில் கண்டுபிடிக்கமுடியாத "மேஜிக்கல் ரியலிசம்" உள்ள கிராஃபிக்ஸ் சுவராஸ்யம் கொடுப்பதால் பிடிக்கும்.இவ்வகையிலும் முதலிடம் ஹாலிவுட்டுக்குத்தான்.இன்றுவரையிலும் உலக சினிமா என்று கூறுபவைகள் பெரும்பாலும் ஆங்கில சினிமா தாக்கமில்லாமல் வருவதில்லை என்பது நிதர்சனம்!.

திருட்டு என்பது பொருளாக மட்டும் இருப்பதில்லை!.அடுத்தவரின் சிந்தனை,கற்பனை,உழைப்பு போன்றவற்றை  திருடினாலும்  அது திருட்டுதான்! அவர்கள் மட்டும் கோர்ட்டுக்கு சென்றால் நிறைய பணம் பார்க்கலாம் நம்மவர்களிடமிருந்து!ஏனோ கண்டுகொள்வதில்லை?! அகலமனம் படைத்தவர்கள் போல!

     பி.கு:நான் நம்மவர்களை மட்டம் தட்டவில்லை.நம் பக்கம் நிறைய திறமைசாலிகள் உள்ளனர்!மரியாதைக்கு உரியவர்கள்.என் ஆரம்ப வரிகள் அதைத்தான் கூறுகின்றன.இது என்னுடைய முதல் பகிர்வு(கன்னி முயற்சி).தவறு இருப்பினும் தயங்காது சுட்டிக்காட்டுங்கள்.உங்கள் விமர்சனம் என்னை மெருகேற்றும்.வணக்கம்.நன்றி படித்தமைக்கு.

படங்கள் உதவி:கூகுள்